ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் - இலங்கையில் கறுப்பு ஞாயிறு தினம் அனுசரிப்பு

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் - இலங்கையில் கறுப்பு ஞாயிறு தினம் அனுசரிப்பு
Published on

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், பவுத்த மதகுருமாரும் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் கறுப்பு ஆடைகளை அணிந்துள்ளனர். 'ஈஸ்டர் தாக்குதல், கைதேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்ட மனிதப் படுகொலை என்றும், இதில் நேரடியாக தொடர்புடையவர்களுக்கும் கடமைகளைத் தவறவிட்டவர்களுக்கும் சட்டம் நீதி வழங்கட்டும் என்ற வாசகம் இடம்பெற்ற பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ள இந்த கறுப்பு ஞாயிறு தின போராட்டம், இலங்கை முழுவதும் நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com