EarthQuake | India | Myanmar | 1 மணிநேரத்தில் 4 முறை குலுங்கிய பூமி - மியான்மரில் நிலநடுக்கம்
இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 4 முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டன. இந்தியாவில் இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டியில், காலை 9.18 மணிக்கு நில நடுக்கம் உணரப்பட்டது. அதே சமயத்தில், மத்திய மியான்மரில் மெய்க்டிலா Meiktila அருகே 5 புள்ளி 5 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தஜிகிஸ்தானில் காலை 9.54 மற்றும் 10.36 என இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
