கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பறந்த சுனாமி எச்சரிக்கை

x

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடல் மற்றும் ஹோண்டுராசின் வடக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், புவர்டோ ரிக்கோ (Puerto Rico) மற்றும் விர்ஜின் (virgin) தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, பனாமா, நிகரகுவா, கவுதமாலா உள்ளிட்ட நாடுகளின் கடற்கரையில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்