தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்க எதிர்ப்பு - ஐ.நா.வின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்க எதிர்ப்பு - ஐ.நா.வின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
Published on
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, தீவிரவாதத்தை ஆதரித்து நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் கண்காணிக்க ஐ.நா திட்டமிட்டுள்ளது.ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பங்கேற்ற இந்திய பிரதிநிதியான சையத் அக்பருதீன், இதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் நாடு என விமர்சித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com