Donald Trump | USA-வில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் - நிலைமையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த உலகம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு, கூடுதலாக இரண்டாயிரத்து 700 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்காக, கடற்படையில் இருந்து 700 வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக இரண்டாயிரம் தேசிய படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, பெண்டகன் அறிவித்துள்ளது. இதனிடையே, சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கையை கண்டித்து, சான் பிரான்சிஸ்கோவிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, போலீசார் ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர்.
Next Story