Donald Trump | America | "கைப்பற்றிவிட்டோம்..." - மார்தட்டி அறிவித்த டிரம்ப்
Donald Trump | America | "கைப்பற்றிவிட்டோம்..." - மார்தட்டி அறிவித்த டிரம்ப்
வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா, அமெரிக்கக் கடலோர பாதுகாப்பு படை, வெனிசுலா கடற்கரையில் பெரிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, ஸ்கிப்பர் எனப்படும் இந்த கப்பல் வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெயைக் கொண்டு சென்றதாகவும், இது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் சட்டவிரோத கப்பல் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்கக் கடலோர பாதுகாப்பு படை, எண்ணெய் கப்பலை கைப்பற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
