பிரபலங்கள் ஒன்றாக கூடிய நைட்கிளப்பில் கோர விபத்து - VIP-க்கள் உட்பட79 பேர் மரணம்

x

டொமினிகன் குடியரசு நாட்டில், இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது. சாண்டோ டொமிங்கோ Santo Domingo என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இதைக் காண அரசியல் கட்சியினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் குவிந்தனர். இந்நிலையில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது. 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, விடுதியின் கூரை இடிந்து விழுவதற்கு சற்றுமுன்பு பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்