தீபாவளிக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

x

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது... கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, ராம்லீலா உள்ளிட்ட இந்தியாவின் 15 விஷயங்கள் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதனுடன் தற்போது தீபாவளி பண்டிகையும் இணைக்கப்பட்டுள்ளது... அடுத்த ஆண்டு சத் பூஜையை யுனெஸ்கோவுக்கு இந்தியா பரிசீலித்துள்ளது. தீபாவளி யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுக்க உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்றும், இது நமது நாகரிகத்தின் ஆன்மா எனவும், இது வெளிச்சத்தையும் நீதியையும் வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்