Digital Scams | Myanmar | ஆன்லைன் மோசடி.. நூற்றுக்கணக்கில் சிக்கிய சீனர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
ஆன்லைன் மோசடி - நூற்றுக்கணக்கான சீனர்கள் கைது.தாய்லாந்து - மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மியாவாடி நகரில் நடத்தப்பட்ட சோதனையில் மோசடி மையங்களை நடத்தி வந்த நூற்றுக்கணக்கான சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடிக்காக அவர்கள் தங்கி பயன்படுத்தி வந்த கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 180க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், 1000க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2653 கணினிகள் மற்றும் 21 ஆயிரத்து 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story
