பக்ரீத் பண்டிகை - வங்கதேசத்தில் அலைமோதிய கூட்டம்

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வங்கதேசத்தில் ஏராளமானோர், ரயில், கப்பல் மற்றும் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை - வங்கதேசத்தில் அலைமோதிய கூட்டம்
Published on

பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வங்கதேசத்தில் ஏராளமானோர், ரயில், கப்பல் மற்றும் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர், தலைநகர் டாக்காவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்ட அவர்களில் பலர், ரயில் கூரைகளில் ஆபத்தான வகையில் பயணம் செய்தனர். இதேபோல், கப்பல் மற்றும் படகுகளிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

X

Thanthi TV
www.thanthitv.com