"நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து" - அரபு நாட்டில் இருந்து வந்த அறிவிப்பு
ஏமன் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவை சேர்ந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய இஸ்லாமிய தலைவரான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story
