"அப்பா பயமா இருக்கு; CM சார் காப்பாத்துங்க.."ரஷ்யாவில் கதறும் தமிழக மாணவர்
ரஷ்யாவில் தமிழக மாணவர் சித்ரவதை...மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை
தமிழகத்தில் இருந்து மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற தங்கள் மகனை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் வசிக்கும் சரவணன்-பாமா தம்பதியரின் மகன் கிஷோர்,
கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளார். படிப்பு செலவுக்காக, பகுதிநேர வேலையாக கூரியர் நிறுவனத்தில் தனது நண்பர்களுடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் பொருட்களை டெலிவரி செய்தபோது ரஷ்யாவால் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
மகனை மீட்க பெற்றோர் போராடி வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான போருக்கு செல்ல கையெழுத்திடுமாறு போலீசார் தன்னை மிரட்டுவதாகவும், தனி அறையில் பூட்டி சித்ரவதை செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
