Cyclone Ditwah | "இலங்கையின் மிகப்பெரிய பேரிடர் டிட்வா.. மீண்டு வர அதிக காலமாகும்.."
இலங்கை வரலாற்றிலேயே இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய பேரிடர் டிட்வா புயல் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய நிறைய காலமாகும் என்றும் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகே வேதனை தெரிவித்துள்ளார். இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயலால் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என கூறப்படுகிறது. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அந்நாட்டுக்கு, ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில், இந்தியா மீட்பு பணியில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
Next Story
