கண்டம் விட்டு கண்டம் தாண்டி.. கடல் கடந்து சென்ற புனித நீர்
இந்தியா மற்றும் டிரினிடாட் - டொபாகோ நாடுகள் இடையிலான நட்பு புதிய உச்சங்களைத் தொடும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அந்நாட்டின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் Port of spain நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரினிடாட் - டொபாகோ பிரதமர் காம்லா பெர்சாட் Kamla Persad பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, காம்லா பெர்சாட்டின் முன்னோர்கள் பீகாரில் வாழ்ந்ததால், அவரை பீகாரின் மகள் என்று அழைத்தார். மேலும் அவருக்கு மகாகும்பமேளா மற்றும் சரயு புனித நீரை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தனது இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும், தனக்கு அன்பான வரவேற்பு அளித்த பிரதமர் காம்லா பெர்சாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
Next Story
