முதலைக்கு பயந்து பயந்து வாழும் மக்கள் - கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிடும்
இலங்கையில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இருக்கும் முதலைகளால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இலங்கையின் நில்வாலா நதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முதலைகளால் மீனவர்கள் அச்சத்துடன் தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
Next Story
