

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் கோலாலம்பூர் வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்,
இந்திய மதிப்பில், ஆயிரத்து 870 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மலேசிய நிதித்துறையின் கீழ் இயங்கும் மேம்பாட்டு நிறுவனமான "ஒன் M.D.B " இருந்து, நிதியை தமது சொந்த கணக்குக்கு மாற்றி, மெகா ஊழலில் ஈடுபட்டதாக நஜீப் ரசாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. 22 வங்கி அதிகாரிகள், கடந்த 3 நாட்களாக இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.