

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் மன அழுத்தத்தில் இருக்கும்போது, கேட்ரினா கோரோசிடோ என்ற பெண், கொரோனா மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையின் போது நடனமாடி மகிழ்ந்துள்ளார். கிரீஸ் நாட்டை சேர்ந்த இவர், பிரபல நடிகை மாதுரி தீக்சித்தின் ரசிகை. அவர் நடனமாடும் வீடியோவை அவரின் சக ஊழியர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இது தற்போது வேகமாக பரவி வருகிறது.