உலகத்தை கவர்ந்த இந்திய கலாச்சாரம் - கொரோனாவால் பிரபலமான "வணக்கம்"

ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்த்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தை கவர்ந்த இந்திய கலாச்சாரம் - கொரோனாவால் பிரபலமான "வணக்கம்"
Published on

ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்த்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியர்களின் கலாச்சாரமான கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை தற்போது பல நாடுகள் பின்பற்றும் நிலையில் , அந்த அந்த நாட்டு வரவேற்பு முறை பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கை குலுக்குவதால் எளிதாக பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல நாடுகளில் மக்கள் தங்களின் வரவேற்பு முறையை தற்காலிகமாக மாற்றியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் கன்னங்களை உரசி வரவேற்கும் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர்.குனிந்து கும்பிடு போடுவது , ஜப்பான் நாட்டு மக்களின் பழக்கம்..

கிரீஸ் நாட்டில் , ஒருவர் மற்றொருவரின் தோள்பட்டையுடன்

உரசி வணக்கம் தெரிவிக்கிறார்கள்..வீட்டிற்கு ஒருவர் வந்தால் அவர்களுக்கு துணி கொடுத்து வரவேற்பது, மங்கோலியா மக்களின் பாரம்பரிய முறை..மூக்கையும் தலைநெற்றியையும் உரசி வரவேற்பது , நியூசிலாந்தில் உள்ள MAORI இன மக்களின் கலாச்சாரம்...ஒருவர் தலைகுனிந்து கும்பிட்டு , அதனை மற்றொருவர் கை கூப்பி வரவேற்கும் முறை தாய்லாந்து நாட்டின் கலாச்சாரம்

மூக்குடன் மூக்குடன் முத்தமிட்டு வரவேற்கும் முறை சுவுதி அரேபியா நாட்டில் பின்பற்றப்படுகிறது...தலையில் முத்தமிட்டு வரவேற்பது பிரேசில் மக்களின் கலாச்சாரம்.. கட்டித்தழுவி , கன்னத்தில் முத்தமிட்டு கொள்வது அர்ஜென்டினா நாட்டின் வரவேற்பு கலாச்சாரம்..கையை தலையில் ஒற்றிக்கொள்ளும் வரவேற்பு முறை பிலிப்பைன்ஸில் பின்பற்றப்படுகிறது..இத்தகைய வித விதமான வரவேற்பு முறைகள் இருந்தாலும் , தற்போது அனைத்து நாட்டினரும் தமிழர்களின் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை பின்பற்றுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com