உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், பொது இடங்களுக்கு வருவதையும் மற்றவருடன் கைகுலுக்குவதையும் தலைவர்கள் தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும், தேர்தல் தொடர்பான பேரணிகளை தாம் தவிர்க்க போவதில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.