

உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 24 கோடியே 67 லட்சத்து 47 ஆயிரத்து 147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 4 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 22 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரத்து 848 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். அதே சமயம், 1 கோடியே 82 லட்சத்து 9 ஆயிரத்து 884 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.