ரிலீஸுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்த கூலி
கூலி படத்திற்கு வெளிநாடுகளில் செம்ம டிமாண்ட் - முன்பதிவு ஜோர்
அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் கூலி பட டிக்கெட்டிற்கு செம்ம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள கூலி படம் வருகிற 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலீசுக்கு ஒரு வாரம் இருக்க, மலேஷியாவில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மலேசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கூலி படத்திற்கு செம டிமாண்ட் இருப்பதால், முதல்நாளிலேயே வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
