இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்...

இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்...
Published on

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மட்டக்குளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அங்கிருந்த ஆட்டோ மீது கண்மூடித்தனமாக, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அங்கிருந்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் 2 போலீசார் பலியாயினர். தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இலங்கை மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com