விலங்குகள் மூலம் பணம்பார்க்கும் காஃபிஷாப்கள் - மன நிம்மதி அளிப்பதாக சீன மக்கள் வரவேற்பு

சீனாவில் செல்ல பிராணிகள் கொண்டு நடத்தப்படும் காபி ஷாப்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், அங்கு கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்களை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு.
விலங்குகள் மூலம் பணம்பார்க்கும் காஃபிஷாப்கள் - மன நிம்மதி அளிப்பதாக சீன மக்கள் வரவேற்பு
Published on
சீனாவில் செல்ல பிராணிகள் கொண்டு நடத்தப்படும் காபி ஷாப்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், அங்கு கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்களை விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு. கடினமான இந்த கொரோனா காலக்கட்டம் பலரையும் இறுக்கமான சூழலுக்கு தள்ளிவிட்டது... உறவுகளின் பிரிவு... நீங்காத தனிமை.... கடினமான வேலை என சுழலும் மக்களுக்கு மன நிம்மதியை தரக்கூடியதாக விளங்குகிறது, சீனாவில் பிரபலமடைந்து வரும் பெட் கஃபே.எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்தாலும்... ஒரு கப் காஃபி குடித்தால் சரியாகிவிடும் என சொல்பவர்கள் உண்டு... ஆனால் காஃபியுடன் சேர்ந்து அங்குள்ள விருப்பமான செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது தங்களுக்கு கூடுதல் மன நிம்மதியை அளிப்பதாக கூறுகின்றனர், வாடிக்கையாளர்கள்.அதிலும் செல்ல பிராணிகள் மீது அதீத ஆர்வம் கொண்ட போதிலும்... அவற்றை தங்கள் வீட்டில் வளர்க்க முடியவில்லையே என ஏங்குபவர்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளன, இந்த காஃபி ஷாப்கள்.கண் சிமிட்டும் வாத்துகள்... செம்மறி ஆடு போல் காட்சியளிக்கும் ஓட்டக இனத்தை சேர்ந்த அல்பாக்கா ... கீரிப்பிள்ளை இனத்தை சேர்ந்த ரங்கூன், அன்னை பறவை போல் தோற்றமளிக்கும் கருப்பு நிற வாத்துகள், சிறிய வகை பன்றிகள்... என குழந்தைகளை மட்டுமின்றி... பெரியவர்களையும் ஒரு நிமிடம் கவலையை மறக்க செய்துவிடுகின்றன.இந்த விலங்கினங்கள்.அதிலும், பூனைகளையும், வாத்துகளையும் வருடி கொடுக்கும் போது... அவற்றுடன் செல்ஃபி எடுக்கும் போதும்... தங்களது மன இறுக்கம் அனைத்தும் பறந்து ஓடிவிடுவதாக ஒர்க் பிரஷரை மறக்க இங்கு இளைப்பாற வரும் பலரும் கூறுகின்றனர்,.

X

Thanthi TV
www.thanthitv.com