கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு

இலங்கையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியதில், 2 பேர் உயிரிழந்தனர்.
கலவரமாக மாறிய வாக்குவாதம் : 2 பேர் உயிரிழப்பு - போலீஸ் குவிப்பு
Published on

இலங்கையில், யாழ்ப்பாணம், குடாக்கனை பகுதியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் பிரச்சினை கலவரமாக மாறியதை தொடர்ந்து இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர்,. அப்போது படுகாயம் அடைந்த செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. அதேபோல் தேவராசா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்,. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com