

இந்தியாவில் நடக்க உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் 2021 இன் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் சந்திக்க உள்ளனர். இந்தியா நடத்த உள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு, சீனா ஆதரவு அளிப்பதாக சீன வெளியுறுவத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இதர பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பல்வேறு துறைகளில் கூட்டுறவு முயற்சிகளை தொடர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.