சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு - டிரம்ப் கோபம்

x

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு வரலாற்றை மறைந்துவிட்டீர்களே? என சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சீனா பிரமாண்ட அணி வகுப்பில் காட்சிப்படுத்திய ஆயுதங்கள் என்ன? டிரம்ப் கோபத்திற்கான காரணம் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

80 ஆண்டுகளுக்கு முன்பாக 1945 செப்டம்பர் 2-ல் டோக்கியோவில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போரும் முடிவுக்குவந்தது. இதில் 1937 தொடங்கி 1945 வரையில் சீனாவை கைப்பற்ற ஜப்பான் நடத்திய போரும் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 3 ஆம் நாளை போர் வெற்றி நாளாக சீனா கொண்டாடி வருகிறது. இரண்டாம் உலகப்போர் வெற்றி 80 ஆண்டு நிறைவையொட்டி, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சீனா பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியிருக்கிறது. பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. சீன அதிபர் ஜின்பிங் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கொண்டாட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட பல உலக நாட்டு தலைவர்கள் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சீனாவின் ஆயுத பலத்தை காட்டும் வகையில் அணிவகுப்பு இருந்தது. சீனா டாங்கிகள் தியானன்மென் சதுக்கத்தில் அணிவகுத்தன. சீனாவின் நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது. சீன போர்க்கப்பல்களின் மாதிரிகளும் அணிவகுப்புக்கு எடுத்துவரப்பட்டிருந்தது. அணு ஆயுத ஏவுகணைகள், வான் பாதுகாப்பு லேசர்கள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், கடல் ட்ரோன்கள் என பல ஆயுதங்கள் அணி வகுப்பில் இடம்பெற்றது. சீன தயாரிப்பு போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றது. சீனா போர் விமானங்களின் சாகச காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது.

சீன தயாரிப்பு தாக்குதல் ட்ரோன்களும் இந்த அணிவகுப்பில் கவனம் பெற்றது. சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்களும் கவனம் பெற்றிருக்கிறது. சீன கடற்படையில் இருக்கும் நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் டொர்பீடோ ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சீன கடற்படையில் இருக்கும் நீர்மூழ்கி ஏவுகணையான ஹச்.எஸ்.யு. நீர்மூழ்கி ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. சீனாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளுமே அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. எதிரியின் போர் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கும் வகையிலான லேசர் ஆயுதம் அணிவகுப்பில் இடம்பெற்றது.

தியானன்மென் சதுக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் ராணுவ அணி வகுப்பில் இடம்பெற்று இருந்தார்கள். நூற்றுக்கணக்கான சீன ஆயுதங்களுமே இடம்பெற்றிருந்தது. அணிவகுப்பு முடிந்ததும் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உள்பட பலநாட்டு தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 2020-2024 காலக்கட்டங்களில் அதிகமாக ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலை பார்த்தால் அமெரிக்காவே முதலிடத்தில் இருக்கிறது. அதாவது உலக ராணுவ தளவாட ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு இந்த காலக்கட்டத்தில் 43 சதவீதமாக இருந்துள்ளது.

உலகிற்கு தேவையான 43 சதவீத ஆயுதங்களை அமெரிக்கா சப்ளை செய்திருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் 9.6 சதவீத ஆயுதங்களை சப்ளை செய்திருக்கிறது. உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யா ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யா 7.8 சதவீத ஆயுதங்களை சப்ளை செய்திருக்கிறது. ரஷ்யாவிடம் அதிக ஆயுதங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ராணுவ தளவாட ஏற்றுமதியில் 4 ஆவது இடத்தில் இருக்கும் சீனா, தனது தயாரிப்பில் 5.9 சதவீத ஆயுதங்களை சப்ளை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இடபெற்றிருக்கிறது.

ராணுவ தளவாட ஏற்றுமதியில் சீனா 4 ஆவது இடத்தை பிடித்திருந்தாலும், சீனாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகள் ஆயுதங்களை வாங்கவில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. சரி, இதே 2020-24 காலக்கட்டங்களில் சீனாவிடம் அதிகமாக ஆயுதங்களை வாங்கு நாடுகளையும் பார்ப்போம். ராணுவ தளவாட ஏற்றுமதியில் சீனா 4 ஆவது இடத்தை பிடித்திருந்தாலும், சீனாவிடம் அதிக கடன் வாங்கிய நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகள் ஆயுதங்களை வாங்கவில்லை என்ற பேச்சும் நிலவுகிறது. சரி, இதே 2020-24 காலக்கட்டங்களில் சீனாவிடம் அதிகமாக ஆயுதங்களை வாங்கு நாடுகளையும் பார்ப்போம்.

அந்த இடத்தில் முதலிடத்தில் இருப்பது சீனாவிடம் அதிக கடன்களை வாங்கியிருக்கும் பாகிஸ்தான்தான். அதாவது சீன ஆயுத ஏற்றுமதியில் பாகிஸ்தானுடைய பங்கு மட்டுமே 63 சதவீதமாக இருக்கிறது. அதுவே பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து பார்த்தால் பாகிஸ்தான் தனக்கு தேவையான ஆயுத தேவையில் 81 சதவீதம் சீனாவிடம் இருந்தே வாங்கியிருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக செர்பியா, தாய்லாந்து, வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளே சீனாவிடம் இருந்து வாங்கியிருக்கிறது. பொதுவாக சீனா ஆயுதங்கள் போர்களத்தில் திறன் நிரூபிக்கப்படாதவை என்ற பேச்சும் இருக்கிறது. இதை உடைத்து எப்படியாவது உலக ஆயுத சந்தையையும் பிடிக்க சீனா திட்டமிடுகிறது. அதற்காகவே இந்த ஆயுத அணிவகுப்பு என்றும் பேசப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்