China | Xi Jinping |மொத்தமாக இறங்கிய ராணுவம்.. சீனாவின் வீடியோவால் உச்சக்கட்ட பதற்றம்
தைவானைச் சுற்றி சீனா கிட்டத்தட்ட 10 மணிநேரம் தீவிர பயிற்சி மேற்கொண்டது...
ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் தைவானுக்கு அருகில் பயிற்சி மேற்கொண்டன. இதுவரை சீனா தைவானைச் சுற்றி நடத்திய பயிற்சிகளிலேயே இதுதான் தைவானுக்கு மிக அருகில் நடத்தப்பட்ட பயிற்சியாகும்.
இதன் மூலம் தைவானின் கப்பல், விமான போக்குவரத்தை சீனா கட்டுப்படுத்தும் நிலையில், முழு அளவிலான போரை துவங்காமல் தைவானை அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது சீனா... தைவானுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சீனா எச்சரிக்கை விடுக்க இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.
Next Story
