`கஜிகி' புயல் எச்சரிக்கை தயார் நிலையில் சீனா, வியட்நாம்
கஜிகி புயல் எச்சரிக்கை காரணமாக சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அனைத்து வணிகங்களும் மூடப்பட்டு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் புயல் வியட்நாமை நோக்கி நகர்வதற்கு முன்பாக மாலைக்குள் சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானின் தெற்கு கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
