

நிசப்தமான சூழலில், செல்லும் இடமெல்லாம் மலர்களின் வாசம் நிறைந்த நனன் மாவட்டத்தின் ஃபாங்னியூ கிராமம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆனால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை, இக்கிராமம் தற்போதிருப்பதற்கும் மாறாக குப்பைக் கூளங்களுடன் காட்சியளித்தது. சீன அரசு கிராம உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் விளைவாக ஃபாங்னியூ புத்துயிர் பெற்றுள்ளது. இதே போல பல கிராமங்கள் அரசின் முயற்சியால் பலனடைந்துள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.