சீனா, துருக்கி சமூக வலைதள கணக்கு முடக்கம் - இந்தியா அதிரடி

x

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, நாட்டிற்கு எதிராக தொடர் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த சீனா மற்றும் துருக்கி நாடுகளின் ஊடக சமூக வலைதள கணக்கை இந்தியா முடக்கியுள்ளது. சீன அரசின் ஆதரவு பிரச்சார ஊடகமான குளோபல் டைம்ஸ் Global Times நாளேடு மற்றும் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜென்சியான ஸின்ஹுவா Xinhua ஆகியவற்றின் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் துருக்கி நாட்டின் பொது ஒளிபரப்பாளரான டி.ஆர்.டி வோர்ல்ட்-இன் TRT World சமூக வலைத்தள கணக்கையும் இந்தியா முடக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்