China | Taiwan | அமெரிக்காவோடு தைவான் போட்ட ஒப்பந்தம்.. சீனா நெத்தியடி ரியாக்ஷன்
அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய தைவான் முடிவு செய்ததால், அந்நாட்டுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் அண்டை நாடான தைவான், இறையாண்மைமிக்க தனி நாடாக இருந்த போதிலும், அதனை தங்களது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. இந்த நிலையில், சீனாவின் எதிர்ப்புக்கு மத்தியில், அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய தைவான் அதிபர் வில்லியம் லாய், அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், தைவானில் பிரிவினைவாதிகளின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், வரலாற்றின் பக்கங்களில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
