

சீனாவில் பனிக்காலம் தொடங்கியதை அடுத்து, அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தில் பூஜ்ஜியத்திற்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் புகழ்பெற்ற வாவு மலைப்பகுதி, வெள்ளை பனிப்போர்வை போர்த்தியபடி ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும், அருவி உள்ளிட்ட நீர்நிலைகளும் உறைந்து காணப்படுகின்றன. இதனை காண, சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.