China Rocket | Moon | மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா எடுத்து வைத்த பெரிய அடி

மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா எடுத்து வைத்த பெரிய அடி

China Rocket | Moon | மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா எடுத்து வைத்த பெரிய அடி #china #rocket #moon சீனாவில் புதிய ராக்கெட், மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் சோதனை வெற்றி சீனாவில் மனிதர்கள் பயணிக்க கூடிய விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. லாங் மார்ச்-10 ராக்கெட் மற்றும் மெங்சோ விண்கலத்தின் சோதனைகள் தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணம், வென்சாங் ஏவுதளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றன. ராக்கெட் மற்றும் மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் நியமிக்கப்பட்ட இடங்களில் தரையிறங்கின. இது சீனாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வெற்றி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முக்கிய படியாக அமைந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com