கொடிய கிருமியான கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாக படைக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் கூறியுள்ளார். உகான் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக கொரோனா பரவி இருக்கலாம் எனவும் பல ஆண்டுகளாக சீனா கொரோனா வைரசுகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.