"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்
Published on

சீனாவின் அதிபராக கடந்த 2012-ம் ஆண்டு பதவியேற்ற ஜீ ஜின்பிங்கின், 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. இந்த நிலையில் சீனத் தலைவநர் பெய்ஜிங்கில், நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், அரசியல் தலைமை குழு அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டு வரை ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது தனது 82 வயது வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் இருக்க அக்கட்சி அனுமதி அளித்துள்ளது. அதிபர் பதவியை தவிர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் கவனித்து வரும் ஜின்பிங், இந்த பதவிகளில் ஆயுள் முழுவதும் இருப்பார் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com