

சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.
வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனா தன்னுடைய அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளோம் என்றும் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து பேசிய அவர், அங்கிருக்கும் நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம் என்றும் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். மேலும் இருநாடுகளும் எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க அமெரிக்க துணை நிற்கும் என்றும் கூறினார்.