இந்தியாவுக்கு எதிரான ரூல்ஸ்களை தூக்கியது சீனா - டிரம்புக்கு மரண அடி
இந்தியாவிற்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா
இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக இந்தியாவின் உரங்களில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை சீனா வழங்கி வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இந்தியாவின் உர இறக்குமதியை சீனா நிறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவிற்கு மீண்டும் உரங்களை ஏற்றுமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரிய தாதுக்களின் ஏற்றுமதியை சீனா கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிற்கு அரிய தாதுக்களை ஏற்றுமதி செய்யவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த அரிய தாதுக்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் வாகனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க கூடியவை என்பதால், இந்திய தொழில்துறை பெரிதும் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும், சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
