சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஒரு புறம் இருக்க, யூனான், ஷியாங்சூ, ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் கட்டுமான வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, தொழில்துறை மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக, மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.