China Earthquake | திடீரென குலுங்கிய கட்டடங்கள்.. அலறி ஓடிவந்த மக்கள்

x

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பூமிக்கு அடியில் 220 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 7 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், பொருள்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்