சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் - "யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" எனத் தகவல்

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்கள் - "யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" எனத் தகவல்
Published on

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரில் இருந்த 33 மாணவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர். அவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருந்த போதிலும் சீனாவில் வந்துள்ள 33 பேருக்கும் தொடர்ந்து 14 நாட்களுக்கு தினமும் 2 முறை மருத்துவ பரிசோதனை நடத்தவும், தனித்தனி அறைகளில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com