China | சீனாவின் சைலண்ட் சம்பவம்.. உற்றுநோக்கும் உலகம்

சீனாவின் சைலண்ட் சம்பவம்.. உற்றுநோக்கும் உலகம்

12வது முறையாக விண்வெளிக்கு பயணித்துள்ள சீனாவின் லிஜியன்-1 ராக்கெட் சீனா லிஜியன்-1 ஒய்-12 (Lijian-1 Y12) ரக ராக்கெட் மூலம் 8 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வடமேற்கு சீனாவில் உள்ள டோங்ஃபெங் வணிக விண்வெளி தளத்திலிருந்து மதியம் 12:03 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி அனைத்து செயற்கைக்கோள்களும் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லிஜியன்-1 தொடர் ராக்கெட்டுகளின் 12-வது விண்வெளிப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வணிக ரீதியிலான விண்வெளித் திட்டங்களில் சீனா தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com