China | 12 ஆண்டுகளாக தோளில் சுமந்து படிக்க வைக்கும் தந்தை - உலகையே வியக்க வைத்த அப்பா மகள் பாசம்
சீனாவை சேர்ந்த ஒருவர், தனது மாற்றுத்திறனாளி மகளை, 12 ஆண்டுகளாக பள்ளிக்குத் தோளில் சுமந்து அழைத்துச் சென்றது, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்ஸி Guangx பகுதியைச் சேர்ந்த காவ் குவாங்ஸிங் Cao Guangxing, என்பவரது மகள் காவ் யாலின் Cao Yalin, சிறு வயதிலிருந்தே தசைக் களைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை தனது மகளை சுமந்து சென்ற தந்தை, தற்போது கல்லூரி நுழைவுத் தேர்வுக்கும் தோளில் சுமந்து சென்றுள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story