என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு.. - பாறையில் மோதிய படகு.. - 6 பேர் பலி..

x

சிலி நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சிலியில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான Caleta Condor-ல் இருந்து Bahia Mansa வரை, முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலா படகு சென்றுள்ளது. Los Lagos அருகே சென்றபோது என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், பாறை மீது மோதி படகு கவிழ்ந்துள்ளது. இதில் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட 27 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்