சுட்டெரிக்கும் வெயில்..பற்றி எரியும் காட்டுத்தீ.. மக்களுக்கு வெளியான அட்வைஸ்
தென்அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. நுபல் (nuble), மவுல் (maule) ஆகிய மாகாணங்களில் காட்டுத்தீ பரவி வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, புயின் (BUIN) என்ற இடத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் வெப்பத்தால் விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க ஐஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகின்றன.
Next Story
