பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்க சிறார்கள் ஆர்வம்

x

பாரம்பரிய இசைக்கருவியை வாசிக்க சிறார்கள் ஆர்வம்

நைஜீரியாவில் கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் சைலோபோன் xylophone பாரம்பரிய இசைக்கருவியை வாசிப்பது குறித்து சிறுவர்களுக்கு இசைக்குழு ஒன்று பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவை சேர்ந்த பிரபல சைலோபோன் இசைக்கலைஞரான இன்வின்ஸ் சண்டே INVINCE SUNDAY என்பவர், ஆப்பிரிக்க இசையை மையப்படுத்தி கலாச்சார இசைக்குழுவை நடத்தி வருகிறார். இந்த சைலோபோன் இசைக்கருவியை வாசிக்க, ஆர்வம் உள்ள சிறார்களுக்கு தனது வீட்டிற்கு அழைத்து வந்து கற்றுக்கொடுத்து வருகிறார். இதன்மூலம் அடுத்து நடைபெறவுள்ள இசை நிகழ்வில் இந்த சிறார்களை பங்கேற்கச் செய்ய உள்ளதாக இன்வின்ஸ் சண்டே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்