சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது

சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் வருகையையொட்டி திபெத் மாணவர்கள் கைது
Published on
சீன அதிபர் வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னறிவிப்பின்றி திபெத் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, திபெத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின்படி, போராட அனைவருக்கும் உரிமை உள்ளதாக திபெத் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக குடியேறிய திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத இந்திய அரசு , திடீரென சீன அதிபரின் வருகையை காரணம் காட்டி எந்தவித முன்னறிவிப்பும், முகாந்திரமும் இல்லாமல் திபெத் மாணவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com