ஆட்டம் காண வைத்த சீனா.. எதிராக ஆதாரத்தை எடுத்துவிடும் அமெரிக்கா?

x

ஏஐ ரேஸில் முந்துவது யார் ? என்ற போட்டியில் அமெரிக்க ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களை ஆட்டம் காண வைத்ததன் மூலம் சீனாவின் Deepseek நிறுவனம் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் மாடல்களை காப்பியடித்துதான் Deepseekஐ உருவாக்கியுள்ளார்கள் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஏஐ ஆலோசகரான டேவிட் சாக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டே ஓபன் ஏஐ நிறுவனத்தின் தரவுகளை அணுகிய Deepseek நிறுவனத்தின் கணக்குகள் பலவும் பிளாக் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்