பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூயுடெர்ட் பொது மேடையில் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட ரோட்ரிகோ டூயுடெர்ட், அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பேசிய போது, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு இலவசமாக புத்தகம் அளிக்கப்போவதாக திடீரென்று அறிவித்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு மேடையேறிய பெண் ஒருவரை, அதிபர் முத்தமிட்டார். இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என ஒரு சிலர் கூறினாலும், மகளிர் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் அதிபரின் நடவடிக்கைக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்