விமான சாகச சாம்பியன்ஷிப் 2018 : விமானத்தில் சீறிபாய்ந்து அசத்திய வீரர்கள்

சீறி பாய்ந்த விமானங்களின் சாகசங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
விமான சாகச சாம்பியன்ஷிப் 2018 : விமானத்தில் சீறிபாய்ந்து அசத்திய வீரர்கள்
Published on
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற விமான சாகச போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த மார்டின் சோன்கா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். செயற்கை தூண்கள் இடையே விமானங்களை விமானிகள் லாவகமாக செலுத்தியது, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. சீறி பாய்ந்த விமானங்களின் சாகசங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும், மூன்றாம் இடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரும் கைப்பற்றினர். அடுத்த கட்ட போட்டிகள் ரஷ்யாவின் கசான் நகரில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com