நடுரோட்டில் துடிதுடித்து பலியான 2 இந்திய மாணவர்கள்... அயர்லாந்தில் அதிர்ச்சி | Car Accident

x

அயர்லாந்து நாட்டில் நடந்த சாலை விபத்தில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Carlow நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் செரேகுரி சுரேஷ் சௌத்ரி Cherukuri Suresh Chowdhary மற்றும் சித்தூரி பார்கவ் Bhargav Chitturi ஆகிய 2 மாணவர்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் விபத்தைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்